தேவையான பொருட்கள்
நல்லெண்ணெய் -நூறு கிராம்
கடுகு - ஒரு ஸ்பூன்
வெந்தயம் - ஒரு ஸ்பூன்
வெங்காயம் - 1/4 கிலோ
இஞ்சி, பூண்டு - 1 tsp each
சுக்குப்பொடி - 50 கிராம்
மிளகு - 100 கிராம்
செய்முறை
நல்லெண்ணெயை கடாயில விட்டு, கடுகு, வெந்தயத்தைப் போட்டு வறுத்து,சின்ன வெங்காயத்தை உரிச்சுப் போட்டு தாளிக்கணும். இதோட தேவையான அளவு இஞ்சி, பூண்டு, சுக்குப்பொடி சேர்த்து எலுமிச்சை அளவு புளியைக் கரைச்சி விடணும். மிளகை அரைச்சு அந்தப் பொடியை தூவி கொதிக்க வெச்சு இறக்கணும். சுக்கு குழம்பு சூப்பரா இருக்கும்! தலைவலி, உடல்வலி நொடியில மறைஞ்சிடும்.