ரவா தோசை

தேவையான பொருட்கள்

பச்சரிசி மாவு - முக்கால் கிலோ
மைதா மாவு - 100 கிராம்
ரவை - 100 கிராம்
தேங்காய்த் துருவல் - ஒரு டீஸ்பூன்
கேரட் துருவல்- ஒரு டீஸ்பூன்,
மிளகு - ஒரு டீஸ்பூன்,
சீரகம் - ஒரு டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை: பச்சரிசி மாவு, மைதா மாவு, ரவை இவற்றை முக்கால் லிட்டர் தண்ணீரில் கரைத்துக் கொள்ளவும். இந்தக் கரைசலில் உப்பு சேர்த்து தேங்காய்த் துருவல், கேரட் துருவல், மிளகு, சீரகம் இவற்றைக் கலந்து தோசையாக வார்க்கவும். பொதுவாக ரவையை நன்கு ஊற வைத்துதான் அரிசி மாவில் கலந்து தோசை வார்ப்பார்கள். ஆனால் ரவா தோசை முறுகலாக வர வேண்டும் என்பதற்காக ரவையை மாவில் அப்படியே கலந்து செய்வார்கள்