பட்டர் சிக்கன் மசாலா



தேவையான பொருட்கள் :

சுத்தம் செய்த சிக்கன் துண்டுகள் - அரை கிலோ
பாதாம் பருப்பு - 6 (ஊறவைத்து அரைத்துக் கொள்ளவும்) // முந்திரி உபயோகிக்கலாம்//
கரம் மசாலா தூள் - கால் டீஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது - அரை டேபிள் ஸ்பூன்
வெங்காயம், தக்காளி - 3 (தலா)
மிளகாய்த் தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
பட்டை - சிறு துண்டு
லவங்கம் - 1
வெண்ணெய் - 100 கிராம்
மைதா மாவு, எலுமிச்சை ஜூஸ் - 1 டேபிள் ஸ்பூன் (தலா)
பால் - அரை கப்
மல்லித்தழை - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவைக்கு.

செய்முறை : சிக்கன் துண்டுகளுடன் இஞ்சி, பூண்டு விழுது, பாதாம் விழுது, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், கரம் மசாலாத்தூள், எலுமிச்சை ஜூஸ் சேர்த்து 1 மணி நேரம் ஊறவைக்கவும்.

50 கிராம் வெண்ணெயில் மைதா மற்றும் பால் சேர்த்து நன்கு கலந்து மிதமான தீயில் அடுப்பில் வைத்து நன்கு கிளறவும்.இதுதான் ஒயிட் சாஸ்! வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு பட்டை, லவங்கம் தாளித்து வெங்காயம்,தக்காளி சேர்த்து நன்கு வதக்கி ஆறிய பின் மிக்சியில் அரைத்து வைத்துக் கொள்ளவும்.

பிரஷர் பேனில் மீதமுள்ள வெண்ணெயை சேர்த்து அரைத்து வைத்த வெங்காயக் கலவையை சேர்த்து நன்கு வதக்கி, ஊறிய சிக்கன், ஒயிட் சாஸ் சேர்த்து நன்கு கிளறி மூடவும். 10 முதல் 12 நிமிடங்கள் கழித்து திறந்து பொடியாக நறுக்கிய கொத்து மல்லித் தழை, 2 டீஸ்பூன் வெண்ணெய் ஆகியவற்றை மேலே ஊற்றி பரிமாறலாம். தேவைப்பட்டால் 1 குடை மிளகாயை துண்டுகளாக்கி வெண்ணெயில் வதக்கி சிக்கனில் சேர்க்கலாம்.